
ஈரான், நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) மாண்டதை உறுதிசெய்திருக்கிறது.
திரு லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாவலர்களும் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் தேசியப் பாதுகாப்பு மன்றம் அந்தத் தகவலை வெளியிட்டது.
முன்னதாக ஆகாயத் தாக்குதலில் திரு லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சொன்னது.
திரு லாரிஜானி ஈரானியத் தலைவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டார்.
அவர் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) மிகவும் நெருக்கமானவர்.
இதற்கிடையே பதற்றத்தைக் குறைக்க அல்லது அமெரிக்காவுடன் சண்டைநிறுத்தம் தொடர்பிலான பரிந்துரைகளை ஈரானின் புதிய உச்சத் தலைவர் முஸ்தபா கமேனி (Mojtaba Khamenei) நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது அமைதிக்கான சரியான நேரம் இல்லை; அமெரிக்காவும் இஸ்ரேலும் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்று திரு கமேனி சொன்னதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் கூறினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments