
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது, இதனால் உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளிப்பதாக கூறியிருந்தது.
இது விவாதத்தை கிளப்பிய நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதா என காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கமல்ஹாசன் எம்பி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மக்களாகிய நாங்கள் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து உத்தரவுகள் வரும் நிலையில் நாங்கள் இல்லை, உங்களுடைய பணிகளை மட்டும் கவனிக்கவும்.
பரஸ்பர மரியாதை மட்டுமே நிலையான உலக அமைதிக்கான அடித்தளமாகும்.
உங்கள் நாடும் அதன் மக்களும் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ எங்கள் நல்வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments