Ticker

6/recent/ticker-posts

NDA கூட்டணியில் தவெக இணைய வேண்டும்... பாஜக விடுத்த அழைப்பு!


தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைய வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் தனது லட்சியம் என தவெக தலைவர் விஜய் கூறி வருவது உண்மையென்றால் அவர் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் தனித்து நின்று சக்தியை நிரூபிப்பேன் என்று கூறுவதை விட, நடைமுறை எதார்த்த அரசியலை புரிந்து கொண்டு மக்களின் எண்ணத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் நலன் காக்க, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்றும் அவருக்கான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
/b>
ஜனநாயகத்தை பாதுகாக்க அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், தேர்தல் முடிந்ததும் விஜய் கட்சி நடத்தவே முடியாத நிலை ஏற்படும் என்றும் ஏ.என்.எஸ்.பிரசாத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments