
இனியவை நாற்பது-25
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
விளக்கம்:
ஐம்புலன்களால் வருகின்ற ஆசைகளை, அடக்கி வாழ்வது இனிது.
கையில் தங்கக் கூடிய பொருளே கிடைப்பதாக இருந்தாலும், கல்லாதவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து விடுவது இனிது.
மனதில் நிலையற்ற எண்ணங்கள் உள்ளவர்களின் நட்பினைக் கை விடுதல் இனிது.
இனியவை நாற்பது-26
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.
விளக்கம்:
நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை, ஒருவர் மிகவும் விரும்பிக் கேட்டால், அதைக் கொடுப்பது இனிது.
நம்மை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் வாழாமல் இருப்பது இனிது.
நம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொள்ளமல் கேட்பவர்களுக்கு அள்ளித் தரும் அன்பு மிக இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments