Ticker

6/recent/ticker-posts

பிக்குகளின் போதைப் பொருள் விவகாரம்!:புத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டிய முஸ்லிம் சமூகம்


கடந்த சில நாட்களுக்கு முன் 110 கோடி ரூபாய் போதைப் பொருட்களுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சம்பந்தமாக பரந்தளவிலான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

இந்த விவகாரத்தை பொருத்தவரையில்,  ஒரு சிலர் இதன் பின்னணியில் இருக்கலாம். ஆனால் இதில் 99 பௌத்த சகோதரர்கள் இதற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர்.

அதிலும் நடு நிலைமை பேணக்கூடிய முக்கிய பௌத்த சகோதரர்களின் மனநிலை இந்த விடயம் சம்பந்தமாக கடும் கோபத்தையும், தங்களது மதம் சம்பந்தமாக கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எமது சில  சகோதரர்களின் 
சில பதிவுகள் பௌத்த சகோதரர்களின் உணர்வுகளை தூண்டி, ஆத்திரத்தையும் மேலும் மேலோங்கச் செய்யும் விதமாக  அமைந்துள்ளதை காண முடிகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். அனைத்து பௌத்த மக்களும் இந்த இழிவான செயலை விரும்ப மாட்டார்கள்.

எனவே எமது பதிவுகளை விடுவதில் புத்திசாதுரியமாக  நடந்து கொள்ள வேண்டும்.

இச்சந்தர்ப்பமானது அந்த சமூகத்தின் சில முக்கியஸ்தர்கள் எமது பதிவுகளை அவதானிப்பவர்களாக இருக்கக்கூடும்.

எமது சமூகத்திலும் போதை பொருள் வியாபாரிகள் இல்லாமல் இல்லை.அவர்களினால் இவ்வாறான செயல்கள்  நடந்திருந்தால் அது அவர்களைச் சார்ந்ததே தவிர,   முழு முஸ்லிம் சமூகத்தையும் சார்ந்தது அல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனவே எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இது சம்பந்தமாக விமர்சனங்களை தவிர்த்து, அந்த மக்களின் உணர்வுகளை மதித்து, மௌனமாக இருப்பதே எமது நட்பண்புகளை வெளிப்படுத்தக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாகும்.

பேருவளை ஹில்மி 

 


Post a Comment

0 Comments