Ticker

6/recent/ticker-posts

ஐபிஎல் 2026: 242 ரன்கள் குவித்து அதிரடி: டெல்லியை வீழ்த்தி அசத்திய ஹைதராபாத்..!


ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் (21) நடைபெற்ற ipl 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

நடப்பு ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 5 போட்டிகளில் விளையாடிய 3-ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் நடப்புத் தொடரில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் உள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியதில் 13-ல் ஐதராபாத்தும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி ஐதராபாத் அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இறுதியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஐதராபாத் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

kalkionline


 


Post a Comment

0 Comments