Ticker

6/recent/ticker-posts

79 வயதுடைய மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை ; இலங்கையில் பயங்கரம்


கிரிந்திவெல பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 79 வயதுடைய மூதாட்டியை பாலியல் ரீதியில் துன்புறுத்தி , கழுத்தை நெரித்து கொலை செய்த பின், அவரது காதுகளை அறுத்து தங்க தோடுகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 67 வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 38 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணை

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தி மற்றும் சம்பவத்தின் போது சந்தேக நபர் அணிந்திருந்த ஆடைகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரிந்திவெல - கிரிமெட்டியவத்த பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.

கடந்த 18ஆம் திகதி கிரிந்திவெல, ஹிஸ்வெல்ல பகுதியில் வசித்து வந்த  வயது முதிர்ந்த பெண்ணே இவ்வாறு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

jvpnews


 


Post a Comment

0 Comments