Ticker

6/recent/ticker-posts

எதிர்கால தலைமுறையை காக்க இங்கிலாந்து எடுத்த அதிரடி நடவடிக்கை! மன்னர் அனுமதி கொடுத்ததும் நடைமுறைக்கு வந்த சட்டம்


இங்கிலாந்தின் எதிர்கால தலைமுறையை காத்து சிறந்த உடல்நலத்துடன் இருப்பதற்கு ஏதுவாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பெரும் அச்சுறுத்தல் தரும் விஷயமாக புகைப்பிடிப்பது இருந்துவருகிறது. இதய நோய் முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் முக்கிய காரணமாகவும் சிகரெட் இருந்துவருகிறது. இந்தச் சூழலில், 2009 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க சட்டமான புகையில்லை தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மூன்றாம் சார்லஸ் மன்னரிடம் இருந்து ஒப்புதலும் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்தச் சட்டம் அங்கு நடைமுறைக்கும் வந்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு முதலே இந்தச் சட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், தற்போது அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, 2009 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்தில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகரெட் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம், இங்கிலாந்தின் எதிர்கால தலைமுறை முழுவதுமாக சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

news18


 


Post a Comment

0 Comments