Ticker

6/recent/ticker-posts

மூதாட்டியிடம் வம்பிழுத்த ரோபோ; கைது செய்த காவல்துறை


அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நாடக விளங்குகிறது சீனா. இந்நாட்டில் ஆண்டுதோறும் ஏராளமான புதிய வகையிலான  கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், சீனா மனித மற்றும் நாய் உருவிலான ரோபோக்களையும் உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில்,  கடந்த மார்ச் 12 அன்று "மாக்காவ்" நகரில் இரவு நேரத்தில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் சாலையில் போனில் பேசியபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் யதார்த்தமாகப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தபோது, அவருக்கு மிக நெருக்கமாக ஒரு மனித உருவ ரோபோ நின்றுகொண்டிருந்தது. இதனைக்கண்டு பயத்தில் அலறிய மூதாட்டி, ரோபோவை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பின்பு, "உன்னால் என் இதயமே நின்று போனது" என ரோபோ மீது கோபப்பட்டார். இதற்கு மனித உருவிலான ரோபோவும் அந்த மூதாட்டியிடம் ஏதோ பதிலுக்குப் பேச, வாக்குவாதம் அதிகரித்துள்ளது.   

இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியுள்ளது. இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்து  காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். பின்பு நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர், ரோபோவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.  காவல்துறை அதிகாரி ஒருவர், ரோபோவின் கையை பிடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து,  மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு உடலளவில் காயம் எதுவும் இல்லை என்ற போதிலும், பயத்தின் காரணமாக அவர் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்ததால் இரவு முழுவதும் அவர் மருத்துவ மனையிலேயே தங்கவைக்கப்பட்டார்.  

nakkheeran


 


Post a Comment

0 Comments