Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ச குடும்பத்தின் மோசடிகள்! நியாயப்படுத்தும் மகிந்த தரப்பினர்


மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளில் 93,000 கோடி உள்ளதாக சிறிலால் பிரியந்த (15.4.2026) கூறிய விடயமானது இன்றையதினம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ளது.

அதுமட்டுமன்றி இந்த விடயம் குறித்த மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையிலே, இது ஒரு பொய்யான தகவல் மகிந்த ராஜபக்சவிடம் அப்படியான வங்கிக் கணக்குகளும் இல்லை, அவ்வளவு பெரிய தொகையான பணமும் இல்லை என முறைப்பாடு அளித்துள்ளனர்.

மேலும், இது திட்டமிட்ட சதி. ராஜபச்சக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் எனவும் ராஜபக்சவின் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

டுபாயில் இருப்பதாக சொல்லப்படும் எட்டு வங்கிக்கணக்குளில் உள்ள  93,000 கோடி ரூபாய் விவகாரம் ஒரு பொய்யான செய்தி.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தான் இந்த விடயத்தை திட்டமிட்டு வெளியிட்டுக் கொண்டு இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசான் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

tamilwin


 


Post a Comment

0 Comments