Ticker

6/recent/ticker-posts

“அமெரிக்காவின் பாதுகாப்பு இனி எங்களுக்குத் தேவையில்லை” - ஐக்கிய அரபு அமீரக அரசியல் விமர்சகர்!


‘நாங்கள் எங்களை நிரூபித்துவிட்டோம். இனி அமெரிக்காவின் பாதுகாப்பு அமீரகத்துக்கு தேவையில்லை’ என்றுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் விமர்சகர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதற்றங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பது விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக அமீரகத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய தளங்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்திய பின், இந்த விவாதம் வலுப்பெற்றது. இந்நிலையில், அமீரகத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் அப்துல்காலிக் அப்துல்லா, அந்நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் இனி அந்நாட்டிற்கு "மூலோபாயச் சொத்துக்கள்" (Strategic Assets) அல்ல என்று கூறியுள்ளார். இது தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

மேலும் “அமெரிக்க ராணுவத் தளங்கள் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு பாதுகாப்பைத் தருவதை விட, அவை ஒரு சுமையாக மாறியுள்ளன” என அப்துல்லா பேசியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப்பதிவில் அவர், “ஈரானின் தாக்குதல்களில் இருந்து எங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்து விஷயங்களும், உள்நாட்டளவில் எங்களிடமே இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, எங்களை நாங்கள் நிரூபித்துவிட்டோம். எனவே முன்பு இருந்தது போல அமெரிக்காவின் பாதுகாப்பு இனி அமீரகத்துக்கு தேவையில்லை. வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க தளவாடங்கள் நீக்கப்பட வேண்டும்” என்றுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தான் இதைக் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன் “வெளிநாட்டுத் தளங்களை அமைப்பதை விட, நவீன மற்றும் மேம்பட்ட ராணுவ உபகரணங்களை வாங்குவதே இனி ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாட்டின் சொந்தப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் அமீரகம் கவனம் செலுத்த வேண்டும். இந்த அணுகுமுறை தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்குச் சிறப்பாகப் பயன்படும்” என்றுள்ளார்.
advertisement

முன்னதாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பின் பல மூலோபாய மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணத்தை கிரிப்டோ கரன்சியாக வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக 2020-ல் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தை (Abraham Accords) ஒரு துரோகமாகக் கருதுகிறது ஈரான். தன் எதிரியான இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ள நாடுகளைத் தண்டிக்கும் நோக்கோடும் இந்தத் தாக்குதல் அமைந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல அமெரிக்க ராணுவத் தளங்கள் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளன. அதனால் அந்தத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியது. தன் எல்லை அருகே அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
advertisement

அதேநேரம், ஈரானுக்கு அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில், அந்நாட்டு அதிபர் மசூத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அரக் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஈரானின் அந்தத் தாக்குதலை முறியடித்தது அமீரகம். இதற்கு பதிலடி தரும் வகையில்தான், தற்போது அப்துல்லா ‘நாங்கள் நிரூபித்துவிட்டோம். இனி அமெரிக்காவின் பாதுகாப்பு அமீரகத்துக்கு தேவையில்லை’ என்றுள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments