
"நியூயார்க் டைம்ஸ் " வெளியிட்டுள்ள ஒரு பரபரப்பான ஆய்வறிக்கை, அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்கத்திற்கு ஈரான் கொடுத்துள்ள மிகப்பெரிய சவாலை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஈரானைப் போல வேறு எந்த நாடும் அமெரிக்காவின் இராணுவத் திறன்களை இவ்வளவு தூரம் சேதப்படுத்தியதில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் 'ட்ரம்ப் நிர்வாகம்' எதிர்பார்த்ததை விட, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகின்றது.
மத்திய கிழக்கில் உள்ள இராணுவத் தளங்கள் உட்பட மொத்தமாக 17 அமெரிக்க இலக்குகளை ஈரான் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது. குறிப்பாக அங்கள்ள ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை ஈரான் முடக்கியுள்ளது.
இந்தத் தளங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மிகவும் கடுமையானவை என்றும், அவற்றை மீண்டும் சீரமைப்பது இலேசான காரியமல்ல என்றும் அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் உள்ள 13 அமெரிக்க இராணுவத் தளங்களில் பல, இராணுவ வீரர்கள் தங்க முடியாத நிலையில் சீர்கெட்டுப் போயுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தற்காலிகமாக ஹோட்டல்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலிருந்து பணியாற்றி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
போரின் முதல் இரண்டு வாரங்களிலேயே அமெரிக்க இராணுவத்திற்கு சுமார் 800 மில்லியன் டொலர் மதிப்பான சொத்து சேதங்களை ஈரான் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா பல போர்களில் ஈடுபட்டிருந்தாலும், ஈரானின் நவீன ஏவுகணைத் தொழில்நுட்பம் அமெரிக்காவின் வான்வழித் தற்காப்பு அரண்களைத் துளைத்து இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை என இராணுவ வல்லுநர்கள் வியப்புடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சரிவு அமெரிக்காவின் வல்லரசு மகுடம் அதன் தலையிலிருந்து நழுவி விழுகின்ற தருணமாகும்.
வெள்ளை மாளிகையிலிருந்து கசிந்த அந்த செய்தியில்,
"ஈரான் போரை முடிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்பது அவசியமில்லை" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் அமெரிக்க ஆதிக்கம் சரிந்துவிட்ட இந்தச் செய்தியை முதலில் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டது, பின்னர் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க் ரூபியோ ஆகியோர் உறுதிப்படுத்தினர். இந்தச் செய்தி Times of Israel, CBS News, NBC News, CNN, BBC உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஊடகங்களிலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ஆதிக்கம் ஒரே இரவில் இவ்வளவு அதிரடியாக மாறிய வரலாற்றுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.
ஈரானை அழிப்பதற்காக போர் தொடுத்த அமெரிக்கா, இறுதியில் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிட்டு வெளியேறுவதென்பது, அமெரிக்காவின்
அந்தஸ்து சிதைந்துவிட்டது என்பதையும், போரில் அது தோல்வியடைந்து விட்டது என்பதையும்தான் கோடிட்டுக் காட்டுகின்றது.

இது வெறுமனே ஒரு போர் நிறுத்தமல்ல; ஒரு சரணாகதி என்று கூட சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையை எதிரியின் கட்டுப்பாட்டில் தாரைவார்த்தது மட்டுமல்லாது, எதிரிக்கு வருவாய் திரட்டும் ஒரு இடமாக மாற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறுவதென்பது, அமெரிக்கா தனது உலகளாவிய அதிகாரத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்படுகின்றது.
ஒரு நாட்டை அழிக்கும் நோக்கில் போருக்குச் சென்றுவிட்டு, இறுதியில் அந்த நாட்டின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதியைக் கூட மீட்க முடியாமல் திரும்புவதென்பது, அமெரிக்கா தனது இராணுவ வலிமையை ஒரு “மாயை”என்று உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கின்றது என்றுதான் குறிப்பிட வேண்டும்.
ஒரு வல்லரசானது ஒருபோதும் தனது எதிரியிடம் மண்டியிடாது. ஆனால் இன்று, உலகின் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தீர்மானிக்கும் நிலைக்கு வல்லரசான அமெரிக்காவே தள்ளிவிட்டுள்ளமை உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், அமெரிக்கா இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பிராந்தியங்களில் இருந்த இராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்பதுதான்.
வரலாற்றில் பேரரசுகள் வீழ்வதற்குப் பல தசாப்தங்கள் எடுத்துள்ளன. ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் பேரரசு வரை அனைத்தும் மெதுமெதுவாகவே சரிந்தன.
ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சில நாட்களில்-சில நொடிகளில் சிதைந்து போய்விட்டது என்றுதான் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
இறுதியாக, அமெரிக்காவின் 82வது இராணுவ டிவிஷன் பாராசூட் வீரர்களை ஈரானுக்குள் தரை இறக்கப் போவதாக செய்தி கிடைத்துள்ளது; ஆனால், இதுவரை ஈரானுக்குள் வீரர்கள் பாராசூட் மூலம் தரையிறங்கியதாக எந்த உறுதியான தகவல் இல்லை.
அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்கு சுமார் 2,000 முதல் 3,000 பாராசூட் வீரர்களை அனுப்பும் நிலையில் உள்ளதாகவும், இவர்கள் ஈரானுக்கு அருகில் வளைகுடாப் பகுதியில் அல்லது அருகிலுள்ள தளங்களில் நிலைநிறுத்தப்படலாம் எனவும் அறிய முடிகின்றது.
இது ஈரான் மீதான சாத்தியமான தாக்குதல் அல்லது அழுத்தம் கொடுப்பதற்கான தயார் நிலை என்று கூறப்படுகின்றது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகமான கார்க் தீவைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களின் ஒரு பகுதி இதுவாகும்.
82வது இராணுவ டிவிஷன் பாராசூட் வீரர்கள் மரைன்ஸுடன் சேர்ந்து இப்பகுதியில் ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்கப் படைகளுக்குக் கூடுதல் ஆதரவாக அனுப்பப்படுவதாக அறிய முடிகின்றது.
இது ஈரான் உள்ளே நுழைவதற்கான முழு தயாரிப்பு அல்ல; மாறாக அழுத்தம் கொடுத்து எதிரியைப் பணிய வைக்கும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுவதாக அமெரிக்க ஊடகங்களான NY Times, Stars and Stripes, AP, Reuters போன்றவற்றின் சமீபத்திய அறிக்கைகளிலிருந்து அறிய முடிகின்றது.
சூழ்நிலை வேகமாக மாறலாம் — டிரம்ப் நிர்வாகம் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருவதாகவும் அறிய முடிகின்றது; இருந்தபோதிலும் அமெரிக்க வீரர்களை தமது நாட்டுக்குள் வரவேற்பதில் ஈரான் தீவிரம் காட்டி வருவதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றினால், மத்திய கிழக்கில் இயங்கிவரும் அமெரிக்காவின் 18 - IT நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரான் சூளுரைத்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் ஒரு மாதம் கடந்த நிலையில், "உண்மையைத் தேடும் உலக மக்களுக்கான ஒரு செய்தி!" ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நேரடியாக அமெரிக்க மக்களுக்கு எழுதியனுப்பியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது!

"நாங்கள் அமெரிக்க மக்களுடன் பகைமை பாராட்டவில்லை; அமெரிக்க அரசின் தவறான கொள்கைகளையே எதிர்க்கிறோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ள ஈரானிய ஜனாதிபதியின் கடிதம், போரின் போக்கை ஒரு புதிய மனிதாபிமானப் பார்வைக்கு மாற்றியிருப்பதோடு, இந்தக் கடிதத்தில் அவர் எழுப்பியுள்ள பின்வரும் ஐந்து கேள்விகள் அமெரிக்க மக்களை மட்டுமன்றி, உலக மக்களையும் சிந்திக்க வைக்கின்றது:
(1) "பாலஸ்தீனர்களுக்கு எதிராக, தான் செய்த குற்றங்களிலிருந்து உலகக் கவனத்தைத் திசைதிருப்பவே இஸ்ரேல் இந்த ஈரானிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா ஏன் இஸ்ரேலின் ஒரு பினாமியாக இயங்குகின்றது?"
(2) "இஸ்ரேல் தனது இலக்குகளுக்காக கடைசி அமெரிக்க இராணுவ வீரனையும், கடைசி அமெரிக்க வரிப்பணத்தையும் பலிகொடுக்கத் துடிக்கிறது. இது அமெரிக்க மக்களின் நலனுக்கானதா?"
(3) "ஈரான் நவீன வரலாற்றில் ஒருபோதும் ஒரு போரைத் தொடங்கியதில்லை. ஆயுதத் தளவாட விற்பனைக்காகவும், சந்தைகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு பொய்யான 'ஈரானிய அச்சுறுத்தலா?"
(4) "புற்றுநோய் மருத்துவமனைகளையும், அப்பாவிச் சிறுவர்களையும் குண்டுவீசி அழிப்பதுதான் 'கற்காலத்திற்குத் தள்ளும்' நாகரிகமா? இது அமெரிக்காவின் உலகளாவிய நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தாதா?"
(5) "1953ல் ஈரானின் ஜனநாயக முறையிலான எண்ணெய் தேசியமயமாக்கலைத் தடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததில் இருந்து, இன்றுவரை அமெரிக்கா ஈரானுக்குத் துரோகமே இழைத்து வருகிறது. ஆனாலும் ஈரான் கல்வி, தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் 90% வளர்ச்சி கண்டுள்ளது"
இன்று இந்த ஈரானிய ஜனாதிபதியின் கடிதம் முழு உலகையும் வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளது!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments