
56 வயதான சான் பிரான்சிஸ்கோவைப் பறப்பிடமாகக் கொண்ட, டக்கர் ஸ்வான்சன் மெக்னியர் கார்ல்சன், 2023 முதல் 'டக்கர் ஒன் எக்ஸ்' மற்றும் 'தி டக்கர் கார்ல்சன் ஷோ' ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு அமெரிக்க பழமைவாத அரசியல் ஆர்வலரும் வர்ணனையாளருமாவார்.
அமெரிக்க வலதுசாரி ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரின், இஸ்ரேல் மற்றும் முஸ்லிம் உலகம் குறித்த சமீபத்திய அறிக்கை சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கர்கள் அறியாத ஒரு மறைக்கப்பட்ட உண்மை இருப்பதாக அவர் கூறுகிறார்; அது என்னவென்றால், இஸ்ரேலியர்களை விட முஸ்லிம்கள் இயேசுவை அதிகமாக மதிக்கிறார்கள் என்பதுதான்!
இதன் மத நோக்கைப் பார்த்தால், அதில் ஓரளவு உண்மை இருக்கிறது; இஸ்லாம் இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கிறது; குர்ஆனும் அவரது பிறப்பு மற்றும் அற்புதங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.
இருப்பினும், யூத மதம் இயேசுவை தெய்வீகமானவராகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ ஏற்றுக்கொள்வது இல்லை.
அனைவருக்கும் தெரிந்த இந்த மத வேறுபாட்டை, நீண்ட காலமாக மறைக்கப்பட்ட ஓர் இரகசியம் போன்று இப்போது கார்ல்சன் சித்தரிக்கின்றார்.
கார்ல்சன் இஸ்ரேலை உலகின் மிகவும் வன்மம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடுவதால், இந்த அறிக்கையின் அரசியல் பக்கம் இன்னும் தீவிரமாகப் பார்க்கப்படுகின்றது.
ஈரானுக்கு எதிரானபோர் அமெரிக்காவின் போரல்ல; இஸ்ரேலின் போர் என்று குறிப்பிடும் அவர், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவு குறித்த விவாதத்தில் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார்!
இதன் மூலம் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பிளவை உருவாக்க கார்ல்சன் முயற்சிப்பதாக யூத அமைப்புகள் கூறுகின்றன.
ஆனால், உண்மையை மறைப்பதற்காக முன்வைக்கப்படும் ஒரு பொய்யான வாதம் இது என்று கார்ல்சனின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments