Ticker

6/recent/ticker-posts

மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் நெருக்கடியைச் சமாளிக்க அமைச்சர்நிலைக் குழு: பிரதமர் வோங்


பிரதமர் லாரன்ஸ் வோங் மத்திய கிழக்குப் போரின் தாக்கத்தைச் சமாளிக்க "உள்நாட்டு நெருக்கடி அமைச்சர்நிலைக் குழுவை" (Homefront Crisis Ministerial Committee) அமைத்திருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் குழுவுக்குத் தலைமையேற்பார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் குழுவின் ஆலோசகராக இருப்பார்.

குழு அதன் பணியைத் தொடங்கிவிட்டதாகத் திரு வோங் கூறினார்.

ஏற்கனவே உள்ள நெருக்கடிகாலத் திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்து புதிய திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

முதலில் எரிசக்தி விநியோகத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்படுவதாகத் திரு வோங் சொன்னார்.

மத்திய கிழக்கு தவிர மற்ற இடங்களிலிருந்து கச்சா எண்ணெயும் திரவ இயற்கை எரிவாயுவும் பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் முன்னணியில் திகழும் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது, குடும்பங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உடனடித் தாக்கம் குறைய அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கும்.

எண்ணெய் விலையேற்றம், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றால் ஏற்கனவே நடப்பில் இருக்கும் திட்டங்கள் மேம்படுத்தப்படும். சில திட்டங்கள் முன்கூட்டியே செயல்படுத்தப்படும்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும் உதவி வழங்கப்படும்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் கூடுதல் விவரம் அளிப்பர்.

மூன்றாவது, இத்தகைய சூழலில் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். ஒற்றுமையே நமது பலம் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவுடன் மக்களின் தைரியமும் முக்கியம்.

நாடு நிலைத்திருக்கச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களுக்கும் அதில் பங்கு உண்டு என்று பிரதமர் சொன்னார்.

நிறுவனங்களும் குடும்பங்களும் எரிசக்தி விரயத்தைத் தவிர்த்து அதைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் ஆதரவளிக்கும். ஆனால் ஒவ்வொருவரும் பங்காற்றினால் அது மேலும் வலிமைபெறும் என்றார் திரு வோங்.

seithi


 


Post a Comment

0 Comments