Ticker

6/recent/ticker-posts

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரானில் இருந்து பறந்த முதல் சர்வதேச விமானம்! பயணிகள் மகிழ்ச்சி


ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்தாக்குதலால் மூடப்பட்ட டெஹ்ரான் சர்வதேச விமான சேவை இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இஸ்ரேல் - அமெரிக்கா படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரானின் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

உலக நாடுகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து ஈரான் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக டெஹ்ரானில் இருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. டெஹ்ரானில் இருந்து பிற நகரங்களுக்கும் விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

news18


 


Post a Comment

0 Comments