
இனியவை நாற்பது-33.
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.
விளக்கம்:
ஊரில் எதிர்ப்புகள் இல்லாத செயல்களைச் செய்பவரின் ஊக்கம் இனிது.
சோம்பல் இல்லாமல் இருப்பவனின் முயற்சி மிக இனிது.
பெருமை உடைய மா மன்னர்களின் படையை எதிர்த்துப் போரிடுவது ஒரு அரசனுக்கு இனிது.
இனியவை நாற்பது-34.
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது.
விளக்கம்:
இரவில் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது இனிது.
எதையும் சொல்லும் போது, மறதி இல்லாமல் சொல்வது இனிது.
தேடி வந்து நட்பு பாராட்டும் கயவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளாமல் விலகி விடுவது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments