Ticker

6/recent/ticker-posts

1948 இல் இழைக்கப்பட்ட பாவத்திற்கு ’மன்னிப்பே இல்லை’


"1948-இல் இழைக்கப்பட்ட பாவத்திற்கு மன்னிப்பே இல்லை" என தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, மலையக மக்கள் மீதான வரலாற்று அநீதிகளைச் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) அன்று நடைபெற்ற மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மலேசியா, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறியுள்ள போதிலும், இலங்கைக்கு வந்தவர்களின் வாழ்க்கை 200 ஆண்டுகாலமாகப் பின்தங்கியே உள்ளது. மலையக மக்களை நாடல்கடத்தும் (குடியுரிமை பறிப்பு) வரலாற்றுப் பாவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், அன்றைய தமிழ் அரசியல் தலைமைகளுமே பொறுப்புக் கூற வேண்டும். 1948-இல் இழைக்கப்பட்ட அந்தத் துரோகத்திற்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது.

இலவசக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் பயன் மலையக மக்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வியல் ரீதியாக வேண்டுமென்றே பின்தள்ளப்பட்டனர். இந்த நிலைமையை மாற்றியமைக்கவே தற்போதைய அரசாங்கம் மலையக மக்கள் மீது விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பங்காளிகளாக மலையக மக்கள் உள்ளனர். மலையக இளைஞர், யுவதிகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் எமது ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார்.

tamilmirror

 


Post a Comment

0 Comments