Ticker

6/recent/ticker-posts

ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!


ஜெய்பூரில் (19) நடக்கும் 64-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

4 வெற்றி, 8 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, நிதானமாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்து பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது.

kalkionline

 


Post a Comment

0 Comments