கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் 31-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்!

கோவை செளரிபாளையம் பகுதி-உடையாம்பாளையம் பகுதியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு வகையான சமுதாய பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் "*பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் 31-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டம்*" (11-10-2026) அன்று கோவை செளரிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் திருமண மண்டபத்தில் "வெகு சிறப்பாக" நடைபெற்றது.
ஏழை எளிய மக்களுடன் மத நல்லிணக்கத் தீபாவளிக் கொண்டாட்டம்! ஏழைப் பெண்மணிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா!
மாற்றுத்திறனாளி களுக்குச் சக்கர நாற்காலிகள் வீல் சேர், வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! கண் பார்வையற்ற முதியவருக்கு இலவச கட்டில் மெத்தை மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் விழா! தமிழகத்தின் தலைசிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா! அரசு பள்ளி ஏழை எளிய மாணவிகளுக்குப் புத்தாடைகள், நோட்டுப் புத்தகங்கள் ,எழுது பொருட்கள் வழங்கும் விழா!
ஏழைப் பெண்மணிக்கு இலவச கிரைண்டர் வழங்கும் விழா! பொது மருத்துவ முகாம் ! நான் உயிர் காவலன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா! என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா" நடைபெற்றது.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிறுவனர்
Dr.M.கெளரி சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 'கோவை இலட்சிய துளி மக்கள் அமைப்பின்' நிறுவனர் "திரு.தினேஷ் குமார்" அவர்கள் "வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கை குறித்த powerpoint video" வெளியிட்டு உரையாற்றினார்.

கோவை "திருக்குறள் ஆய்வுக் கழகம் நிறுவனர்,தலைவர், குறளாசான் முனைவர் மு.க.அன்வர் பாட்ஷா, கோவை அன்னமாஸ் அன்னம் கேட்டரிங் கார்னர் நிறுவனர் திரு.J.J இன்னசென்ட், கோவை பாலம் அமைப்பின் நிறுவனர் திரு. பாலம் பாபு, சமூக நல ஆர்வலர் திரு.துரைமுருகன், ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் நிர்வாகிகள் திரு.தனராஜ் திரு.ரங்கநாதன் திரு.கிருஷ்ணராஜ் திரு.பட்டியப்பன் திரு.சாந்தகுமார் "உள்ளிட்டோர் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள்.
"கோவை அக்குபஞ்சர் மலர் மருத்துவர் திருமதி.ஜோதிமணி, பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஹெயில் மேரி, கோவை காலேஜ் ஜெராக்ஸ் நிறுவனர் திருமதி.கவிதா மூர்த்தி, Apsara bridal collection நிறுவனர் திருமதி.ரூபினா, ஷர்மிளா பானு, கோவை அம்மன் ஆட்டோ கேரேஜ் நிறுவனர் திருமதி.நாகலட்சுமி சண்முகம், திருமதி மீனா பாரதி, திருமதி.விஜயகலா துரைமுருகன்" உள்ளிட்டோர் "குத்து விளக்கேற்றி" விழாவை துவக்கி வைத்தார்கள்.
"ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் நிலவேம்பு சித்தர் சண்முகசுந்தரபாபு ஜி சுவாமிகள்" அவர்கள் "சிறப்பு விருந்தினராகக்" கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். "தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம்" அமைப்பின் நிறுவனர் "திரு.முகமது ரஃபி" அவர்கள் "மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்" வழங்கி சிறப்புரை யாற்றினார்கள். கோவை YAAZH HOMES நிறுவனர் "திரு .அம்சகுமார்" அவர்கள்,Lions club of the cbe grand அமைப்பின் செயலாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் "25-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஏழை எளிய மாணவிகளுக்கு புத்தாடைகள், நோட்டுப் புத்தகங்கள் ,எழுதுபொருட்கள் மற்றும் தீபாவளி பரிசு தொகையாக தலா 100/- பணமாக வழங்கி உதவினார். "கோவை அன்னை ஆட்டோ கேரேஜ் நிறுவனர் திரு.சண்முகம், கம்பன் கலைக்கூடத்தின் தலைவர் மருத்துவர் திரு.சுப்பிரமணியம், FB cakes திரு.சிவக்குமார், அவிநாசி மலர் திரு.மோகன்ராஜ்" ஆகியோர் "55க்கும் மேற்பட்ட ஏழை எளிய" குடும்பங்களுக்கு 'அரிசியுடன் அனைத்து வகையான மளிகைப் பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு மற்றும் கார வகைகள்' அடங்கிய "தீபாவளி பரிசுத் தொகுப்பை" வழங்கிச் சிறப்பித்தார்கள்.
மேலும் இவ்விழாவில் "இஸ்லாமிய புத்தக நிலையம் திரு.ஜக்கரியா, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவனர் திரு.ஸ்டீபன்ராஜ், தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ திரு.இஸ்மாயில் பாட்ஷா,பவானி பாரதி அறக்கட்டளை நிறுவனர் திரு.பாரதிராஜா,3-s Fire and safety equipments நிறுவனர் திரு.ஆனந்தன்,ஸ்ரீபாபா முதியோர் அறக்கட்டளை திரு.கனகராஜன், நூல் காஞ்சி இலக்கியப் பேரவை தலைவர் திரு.சோமசுந்தரம், creamfalls icecreams நிறுவனர் திரு.சுரேஷ், கோவை ஆட்டோ மணி, திரு.நாகராஜ், வெள்ளலூர் திரு.மணி, அன்பே சிவம் அறக்கட்டளை திரு.பிரபு ராம், சூலூர் தங்க முத்து மாரியம்மன் கோவில் அர்ச்சகர் திரு.கௌதம், மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிறுவனர் திரு.பழனி குமார்,Ashpho studio திரு.பிரபாகரன்,ஸ்ரீ தர்ஷினி ஏஜென்சிஸ் திரு.சஞ்சய், திருமதி.திவ்யா சக்திவேல், benzen printers நிறுவனர் திரு.பீஜி, திருமதி.பத்மாவதி, Apj packers and movers transport நிறுவனர் திரு.ஆண்டனி ஜெனீஸ், ஸ்ரீ லட்சுமி டிரேடர்ஸ் நிறுவனர் திருமதி.மகாலட்சுமி, opel company manager திரு.மனோஜ், மாசாணிக் கிரானைட் திரு.கனகராஜ், ரமேஷ் குமார், திரு.ராஜா சவுண்ட் சர்வீஸ் திரு.கார்த்திகேயன், டீனா ஏஜென்சிஸ் திரு.பிரபு, வண்ணக் கரங்களின் பிணைப்பு நிறுவனர் திரு.பாலசுப்பிரமணியம்,sri ambal pump and motors நிறுவனர் திருமதி.காஞ்சனா சாமிநாதன்" உள்ளிட்ட பல்துறை சிறப்பு அழைப்பாளர் களுக்குச் "*சமூக சேவையாளர் விருதுகள்*" வழங்கப்பட்டன.
தமிழ் பாரதி இயற்கை உணவகம் மற்றும் வேதிகா தேநீரகம் நிறுவனர் 'திரு.கருணாநிதி, திரு.சுரேஷ்' அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் "அறுசுவை அன்னதான உணவை" வழங்கிச் சிறப்பித்தார்கள். "கோவை VINO TEX நிறுவனர் திரு.பாஸ்கர் மற்றும் கோவை திரு.சுரேஷ்" அவர்கள் விழாவில் கலந்து கொண்ட ஏழை எளிய மக்களுக்கு 'புத்தாடைகள்' வழங்கி உதவினார்கள்.
'திரு.காந்திநகர் நாகராஜ்' அவர்கள் நன்றியுரை வழங்கினார். 'திரு.தமிழரசன்' அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார்.
"பாரதமாதா சுஜன் இலட்சியத்துளி மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் திருவாளர்கள் ரெக்ஸ், ரஞ்சித் , அந்தோணி, அசோக், அஸ்வின் மற்றும் கோவை அறம் அமைப்பின் சிவராம் உள்ளிட்ட நிர்வாகிகள்" விழாவை 'ஒருங்கிணைப்பு 'செய்தார்கள். இந்த விழாவில் "ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், கண்பார்வையற்ற முதியவர், வயதான மூதாட்டி, புற்றுநோயாளி, ஏழை மாணவ மாணவிகள், கணவரை இழந்த பெண்மணி உள்ளிட்ட பலருக்கும் மாதாந்திர நலத்திட்ட உதவிகள்" வழங்கப்பெற்றன.
மேலும் இவ்விழாவில் 'உயிர் அமைப்பு கோவை மாநகர காவல் துறையுடன்' இணைந்து "நான் உயிர் காவலன் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை" பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிறுவனர் "Dr.M.கௌரிசங்கர், திரு.உயிர் ராம் வினோத்" தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
வேட்டை நிருபர்
தமிழ்நாடு

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
Thank you very much for my our trust news
ReplyDelete