Ticker

6/recent/ticker-posts

அச்சுறுத்தும் பெரிய தட்டம்மை.. இதுவரை 500 பேர் பலியானதால் பரபரப்பு.. வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?


வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை நோயால் 500க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

வங்கதேசத்தில் பெரிய தட்டம்மை நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நோய் பரவ ஆரம்பித்த சில நாட்களிலே அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் கண்டறிந்துள்ளன. யுனிசெஃப் தரவுகளின்படி, இந்த நோய் பரவலால் குழந்தைகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80%-க்கும் அதிகமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற தகவல் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதனால் தலைநகர் டாக்காவில் பெரிய தட்டம்மை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதால் நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

பெரிய தட்டம்மை பாதிப்பால் 500க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், வங்கதேசம் முழுவதும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு அவசரகால தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments