
Maglev Trains News: ரயில்கள் என்றாலே தண்டவாளத்தில் சென்று தான் பார்த்திருப்போம். ஆனால் அந்தரத்தில் பறந்து யாராவது பார்த்திருக்கீர்களா? உலக நாடுகளையே மிரட்டும் அப்படி ஒரு கண்டுபிடிப்பை தான் ஜப்பான் கண்டுபிடித்துள்ளது.
Maglev Trains News: உலகின் அதிவேக மற்றும் நவீன போக்குவரத்து தொழில்நுட்பங்களில் மிக முக்கியமானது ‘மேக்லெவ்’ ரயில்கள் ஆகும். உலகின் மற்ற ரயில்களைப் போல இந்த ரயில்களில் சக்கரங்கள் இருப்பதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சாகும். உலக நாடுகளையே மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஜப்பான் இறங்கியுள்ளது உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பறக்கும் ரயில்கள்:
ஜப்பான் புதியதாக கண்டுபிடித்துள்ள ‘மேக்லெவ் ரயில்’ ரயில் தண்டவாளங்களில் சக்கரங்கள் உரசாமல் இயங்குகின்றன என்பது உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்களின் சக்திவாய்ந்த மின்காந்த விசை மூலம் தண்டவாளத்தில் இருந்து சுமார் 8 முதல் 10 சென்டிமீட்டர் உயரத்தில் காற்றில் தூக்கி நிறுத்தப்படுகின்றன.
தண்டவாளத்தின் உராய்வின்றி நகர்தல்:
ரயில்பெட்டி தண்டவாளத்தின் மீது தொடாமல் மிதப்பதால், உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் போகிறது. இதன் காரணமாக சத்தமோ அல்லது அதிர்வுகளோ இன்றி மிக மென்மையாக அசுர வேகத்தில் இந்த ரயில்கள் பயணிக்கின்றன. இது இரண்டு முக்கிய காந்தக் கோட்பாடுகளின் கீழ் இயங்குகிறது. முதலாவதாக ‘மின்காந்த இடைநீக்கம்’ எனப்படும் காந்த ஈர்ப்பு விசை, இரண்டாவதாக ‘மின்காந்த விசை நீக்கம்’ எனப்படும் காந்த விலக்கு விசை தொழில்நுட்பம்.
இன்ஜின் இன்றி பயணம்:
ரயிலை முன்னோக்கி நகர்த்துவதற்காக, அதன் பிரத்யேக தண்டவாளப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிறப்புச் சுருள்கள் மின்சாரம் மூலம் தூண்டப்பட்டு காந்தபுலத்தை உருவாக்குகின்றன. இந்த காந்தபுலம் ரயிலை முன்னோக்கி இழுக்க அல்லது தள்ள உதவுகிறது. இந்த அதிநவீன அமைப்பில் மற்ற ரயில்களைப் போல பெரிய இன்ஜின்கள் எதுவும் இன்றி இயங்குகின்றன.
மேக்லெவ் ரயிலின் முக்கிய அம்சம்:
மேக்லெவ் ரயிலின் முக்கிய அம்சமே அதன் அசாத்திய வேகம் தான். கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானின் 'LO சீரிஸ்’ மேக்லெவ் ரயில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தில் சென்று உலக சாதனை படைத்தது. அதே போல சீனாவில் ஷாங்காய் மேக்லெவ் ரயில் உலகின் முதல் வணிக ரீதியான அதிவேக மேக்லெவ் சேவையாகும். இது ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்திற்கும் நகரத்திற்கு இடையே உள்ள 30 கிலோமீட்டர் தூரத்தை வெறும் சில நிமிடங்களிலேயே கடந்து விடுகிறது.
தொழில்நுட்பத்தின் வரலாறு:
இந்த தொழில்நுட்பத்தின் வரலாறு மிகவும் பழமையானது. 20-ம் நூற்றாண்டில் தொடக்கத்திலிருந்தே விஞ்ஞானிகள் காந்த ரயில் தொழில்நுட்பத்தில் சோதனைகளைச் செய்து வந்தனர். 1960 மற்றும் 1970-களில் பிரிட்டிஷ் பொறியாளர் எரிக் லேத்வைட் லினீயர் மோட்டார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேகத்தின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு இணை இல்லை என்றாலும், சாதாரண தண்டவாளங்களில் இந்த ரயில்கலை இயக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments