
உலகையே உலுக்கியுள்ள, வட சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சின்யுவான் மாவட்டத்திலுள்ள முக்கிய நிலக்கரி உற்பத்தி பகுதியான சாங்ஜியிலுள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட கொடூரமான எரிவாயு வெடிப்பு விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது!
சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 7.39 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பூமிக்கடி சுரங்கத்தினுள் 247 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்; திடீரென பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டுள்ளது!
சுரங்கத்திற்குள் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) வாயுவின் அளவு திடீரென பல மடங்காக அதிகரித்தமை இந்த விபத்துக்குக் காரணமெனத் தகவல் வெளியாகியுள்ளது!
ஆரம்பத்தில் எட்டுப்பேர் மட்டுமே பலி என்று கூறப்பட்டபோதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆக அதிகரிதுள்ளது!
நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமற் போயுள்ள சிலரைத் தேடுவதில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து பற்றி அறிந்ததும், கடும் கோபமடைந்த அதிபர் ஷி ஜின்பிங், "உயிர்களைக் காப்பாற்ற எந்த முயற்சிகளையும் கைவிட்டுவிடாதீர்கள்! விபத்துக்குக் காரணம் யார் என்பதை உடனடியாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுங்கள்!" என உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த கணம் சுரங்கத்தை நடாத்திவரும் Shanxi Tongzhou Coal & Coke Group நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்!
ஆண்டுக்கு 1.2 மில்லியன் டொன் உற்பத்தி திறன் கொண்ட இச்சுரங்கம், "உயர் வாயு உள்ளடக்கம்" காரணமாக அபாயகரமான சுரங்கங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்!
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிக மோசமான சுரங்கப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
2009ல் ஹெய்லாங்ஜியாங் சுரங்க விபத்தில் 100க்கும் மேற்பட்டோரும், 2023ல் மங்கோலியா சுரங்கச் சரிவில் 53 பேரும் பலியாகியுள்ளனர்.
தற்போதைய இந்த விபத்து குறித்த அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்த சீனாவையும் இவ்விபத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments