Ticker

6/recent/ticker-posts

ரோபோக்களுக்காக பிரத்யேக விற்பனை மையம் திறந்த சீனா... கவனம் ஈர்த்த மனித ரோபோக்கள்!


சீனாவின் கிழக்கே உள்ள ஆன்ஹுய் மாகாணத்தில் முதல் முறையாக ரோபோக்களுக்கான பிரத்யேக விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒரே கூரையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சேவை, மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு எனப் பல துறைகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு, ரசாயன தொழிற்சாலைகள் போன்ற அபாயகரமான இடங்களில் மனிதர்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் ரோபோ நாய் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இத்துடன் சீனாவில் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் மனித உருவிலான ரோபோக்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

சமீபத்தில்தான் சீனாவில் பரபரப்பான சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியை ரோபோ செய்து அசத்தியிருந்தன. சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு காவல் படையில் ரோபோக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போக்குவரத்தைத் திறம்பட கட்டுப்படுத்தும் திறன்களுடன் 15 ரோபோக்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

சொல்லப்போனால் சீனாவில் தற்போது HUMANOID ரோபோக்கள் மனிதர்களுடன் நேரடியாகவே போட்டியிடத் தொடங்கியுள்ளன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற அரை-மாரத்தானில் HUMANOID ரோபோவும் பங்கேற்று வெகு வேகமாக ஓடியிருக்கின்றன.

இப்படியாக ரோபோக்களை வடிவமைப்பது, அதனை அன்றாடப் பணிகள் முதல் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் உலகில் முன்னிலையில் இருக்கிறது சீனா.

news18


 


Post a Comment

0 Comments