
முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் மல்வானை இல்லம் தொடர்பான சர்ச்சையில் பசில் ராஜபக்ச பெயர் வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments