
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது" என்று மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
வொஷிங்டன் விதித்துள்ள நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்த பதிவு வெளியாகியுள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments