Ticker

6/recent/ticker-posts

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட சென்னை


இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் வெளியேற்றப்பட்டது.

அஹமதாபாத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சென்னை இழக்க, புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களுக்குள் வருவதை குஜராத் டைட்டான்ஸ் உறுதிப்படுத்தியது.

நான்காமிடத்திலுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் 14 புள்ளிகளை ஏற்கெனவே பெற்றுள்ள நிலையில் 12 புள்ளிகளையே சென்னை பெற்றுள்ளது. மறுபக்கமாக குஜராத் 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளதுடன், 16 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் உள்ளது. முதலாமிடத்திலுள்ள நடப்புச் சம்பியன்கள் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவை ஹைதரபாத் பாரிய ஓட்ட விகிதத்தில் வென்றால் ஹைதரபாத் முதலிடம் செல்ல பெங்களூரு மூன்றாமிடம் செல்லும். ஆக குஜராத் முதலிரண்டு இடத்துக்குள் இருப்பது இறுதியாகியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சென்னை

குஜராத்: 229/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 84 (53), ஷுப்மன் கில் 64 (37), ஜொஸ் பட்லர் ஆ.இ 57 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: குர்ஜப்னீட் சிங் 0/31 [4], முகேஷ் செளத்ரி 1/36 [4])

சென்னை: 140/10 (13.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே 47 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/26 [3], ககிஸோ றபாடா 3/32 [3.4], ரஷீட் கான் 3/18 [2])

போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்

tamilmirror


 


Post a Comment

0 Comments