Ticker

6/recent/ticker-posts

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய குழந்தை... உயிரை பணயம் வைத்த தந்தை!


ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய தன் குழந்தையை, உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளார் தந்தையொருவர். இதன் காட்சி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள கிஷோர்கஞ்ச் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது குழந்தை ஒன்று ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தது. உடனே குழந்தையை அவரது தந்தை மீட்க முயன்றபோது, ரயில் நகரத் தொடங்கியதால் பரபரப்பான சூழல் உருவானது.
அப்போது, ஓடும் ரயிலுக்கு அடியில் குழந்தையை பத்திரமாக பிடித்துக் கொண்டு தந்தை படுத்துக் கொண்டார். ரயில் சென்றதும், இருவரும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர். உயிரை பணயம் வைத்து தந்தை குழந்தையை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments