
புகைப்படம் அல்லது செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது 'பீஸ்' (peace) அதாவது அமைதி என்பதைக் குறிக்கும் இரண்டு விரல்களைக் காட்டுவது பலர் வழக்கமாகச் செய்வது.
ஆனால் சீனாவில் இது புதிதாக இணையத்தில் தனியுரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
புகைப்படங்களில் கைரேகைகள் வெளிப்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், புகைப்படங்களை மேம்படுத்தும் கருவிகள் போன்றவை மூலம் விரல்களின் விவரங்களை எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதைச் சீனாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று காட்டியது.
குறிப்பாக விரல்கள் கேமராவை நோக்கி இருக்கும்போது இது சாத்தியம்.
அன்றாட வாழ்வில் இதைச் செய்வது சிரமம் என்றாலும் இதன் அபாயம் உண்மையானது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இப்போதைக்குப் பீதியடைய வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இருப்பினும், இணையவழிப் புகைப்படங்களில் கைகளை மங்கலாக்குமாறும், அறிமுகமில்லாத சாதனங்களில் கைரேகைகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், காணொளி அழைப்புகள், செயற்கை நுண்ணறிவு முக அடையாளச் செயலிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments