Ticker

6/recent/ticker-posts

மற்றுமொரு டிஜிட்டல் மோசடி அம்பலம்


அரசாங்க டிஜிட்டல் முகமையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, போக்குவரத்து விதிமீறல்களுக்காக அந்த இடத்திலேயே இணையம் வாயிலாக அபராதம் செலுத்தும் 'Gov Pay' முறையின் இணையத்தள முகவரியைப் (Link) போலியாகத் தயாரித்து, இலங்கையர்களிடமிருந்து பணம் பறிக்கும் சர்வதேச மோசடிக் கும்பல் ஒன்று குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்களது கைப்பேசிகளுக்கு இவ்வாறான போலி 'Gov Pay' இணையத்தள முகவரிகள் கிடைக்கப்பெற்ற ஐந்து நபர்கள், இன்றைய தினம் மாத்திரம் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முகவரிகளைத் தீவிரமாகப் பரிசோதித்த பொலிஸார், அவை முற்றிலும் போலியானவை என்பதை உறுதிப்படுத்தி முறைப்பாட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசிகளுக்கு வந்த சில இணையத்தள முகவரிகளைத் தொழில்நுட்ப ரீதியாகப் பரிசோதித்த போது, அவை மொரோக்கோ மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தொலைபேசி எண்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களின் கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக இந்த இணையத்தள லிங்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை அவர்கள் திறந்து பார்த்த போது, போக்குவரத்து விதிமீறல் அபராதமாகத் தலா 10,000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments