
US Iran Deal Framework : அமெரிக்கா - ஈரான் இணைந்து 60 நாள்கள் போர் நிறுத்தத்தை நீட்டித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் நீட்டிப்பு குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்துகொள்ளவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக AFP செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
கையெழுத்திடாத டிரம்ப்
அமெரிக்க மட்டுமின்றி ஈரானும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என Axios செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், செவ்வாய்கிழமையின் நிலவரப்படி, ஒப்பந்தத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் அவை ஒப்புக்கொள்ளப்பட்டாலும் இரு தரப்பு மூத்தத் தலைவர்களின் ஒப்புதல் அளிப்பதற்காக மட்டுமே ஒப்பந்தம் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
ஒப்பந்தத்தின் விவரங்கள் அனைத்தும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றாலும், அவர் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இதுகுறித்து ஓரிரு நாள்கள் சிந்திக்க தனக்கு நேரம் வேண்டும் என கூறியதாகவும் ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக Axios செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கியத்துவம் பெரும் ஹார்முஸ் ஜலசந்தி
அமெரிக்கா - ஈரான் இடையே தற்போது தயாராகி உள்ள இந்த 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி செல்வது முக்கியமானதாக இருக்கும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், ஈரான் இனி எண்ணெய் கப்பல்களிடம் இருந்து வரி வசூலிக்க இயலாது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எந்தவிதமான தொந்தரவும் இருக்காது என்றும் 30 நாட்களுக்குள் அந்த பகுதியில் ஈரான் பொருத்தியிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்றும் தயாராகி உள்ள ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறியதாக Axios வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா ஒப்புக்கொண்ட விஷயங்கள்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிக கப்பல் போக்குவரத்து எந்த அளவிற்கு மீட்டெடுக்கப்படுகிறதோ, அந்தளவிற்கு அமெரிக்க கடற்படை முற்றுகையும் நீக்கப்படும் என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஈரான் சுதந்திரமாக எண்ணெய்யை விற்க ஏதுவாக சில விலக்குகளையும் வழங்க அமெரிக்கா தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அணு ஆயுதம் என்னவாகும்?
அணு ஆயுதத்தை தயாரிக்கப் போவதில்லை என்ற ஈரானின் உறுதிமொழியும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போர் நிறுத்த காலகட்டத்தில், ஈரானில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எவ்வாறு அகற்றுவது என்பதையும்; ஈரானிய செறிவூட்டல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.
முக்கியத்துவம் பெறும் ஒப்பந்தம்
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்களுடன் மோதல் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள போர்நிறுத்தத்தை மீறியதாக அமெரிக்காவும், ஈரானும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து நடந்த மிகக் கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குச் சில நாட்களுக்கு பிறகு, இந்த தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments