Ticker

6/recent/ticker-posts

மகிந்த, நாமல், பசில் ஆகியோர் மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானை சந்தித்தனர்… நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் வெளியானது…


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடியதாக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவரிடம் அறிவிக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் தூதரகத்தில் விசாரணை அதிகாரிகள் அசாத் மௌலானாவிடமிருந்து இந்த வாக்குமூலங்களை பதிவு செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments