Ticker

6/recent/ticker-posts

தோனிக்கு CSK அணியில் நிரந்தர பொறுப்பு - CEO வெளியிட்ட அறிவிப்பு


தோனி சிஎஸ்கேவில் நிரந்தர அங்கமாக இருக்க வேண்டும் என விரும்புவோம் என CSK அணியின் CEO தெரிவித்துள்ளார்.

தோனிக்கு நிரந்தர பொறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ்.தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.  

CSK அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வந்த தோனி, அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்து அதிக ஐபிஎல் கோப்பையை வென்ற அணித்தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் CSK வீரராக அவர் தொடர்ந்து அணியில் உள்ள நிலையில், காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை.  

தோனிக்கு 44 வயதாகி விட்ட நிலையில், வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவர் இந்த தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்து CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நாங்கள் இதுவரை தோனி உடன் எதுவும் விவாதிக்கவில்லை. ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், தோனி தனது முடிவுகளைத் தானே எடுக்கிறார், நாங்கள் அதை மதிக்கிறோம். 

ஒரு வீரராக, பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக என எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அவர் சிஎஸ்கேவில் ஒரு நிரந்தர அங்கமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புவோம்.

அது எதுவாக இருந்தாலும், அவர் என்ன முடிவு செய்கிறார் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு முடிவும் அவரைச் சார்ந்தது" என தெரிவித்துள்ளார்.  

lankasri


 


Post a Comment

0 Comments