Ticker

6/recent/ticker-posts

வேன் மூலம் 13 பேரை மோதிய சம்பவம் – கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்


வெசாக் பௌர்ணமி தின இரவில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, 6 பொதுமக்கள் உயிரிழக்கவும் மேலும் பலர் காயமடையவும் காரணமான சம்பவம் தொடர்பாக, சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய குற்றச்சாட்டு தொடர்பாக 2005ஆம் ஆண்டு யாங்கல்மோதர புகையிரதக் கடவையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மகாநாமஹேவா இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அலட்சியமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் வாகனம் செலுத்தி மனித உயிர்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான வழக்குகள் இனி வெறும் போக்குவரத்து சட்டங்களின் கீழ் மட்டுமன்றி, குற்றவியல் சட்டங்களின் கீழும் விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments