Ticker

6/recent/ticker-posts

கயிறு எங்கே? இளம்பெண்ணை 130 அடியிலிருந்து தூக்கி போட்ட ஊழியர்கள்! பதற வைக்கும் வீடியோ


பிரேசில் நாட்டில் பங்கி ஜம்பிங் (Bungee Jumping) செய்ய வந்த பெண்ணை ஊழியர்கள் கயறு கட்டாமல் 130 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மலைபிரதேச சுற்றுலா தளங்களில் இப்போதெல்லாம் ‘பங்கி ஜம்பிங்’ சாகசம் பிரபலமாகி விருகிறது. நம்மில் பலருக்கும் அதனை வாழ்க்கையில் ஒரு முறையாவது முயற்சி செய்து விட வேண்டும் என்ற அசை இருக்கிறது. அதுபோன்ற வீடியோக்களும் எப்படி இப்படியான உயரத்தில் இருந்து குதிக்கிறார்களோ என்று வியப்புடன் சொல்வதுண்டு. 

இந்த நிலையில், பிரேசிலில் தனது காதலனுடன் சுற்றுலா பயணம் சென்ற இடத்தில் பங்கி ஜம்பிங் செய்ய முயன்ற போது, ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கயிறு எங்கே? பதற வைக்கும் வைரல் வீடியோ 

அந்த வீடியோவில், பெண்ணுக்கு கயிறு கட்டாமல் 130 அடி உயரத்தில் இருந்து ஊழியர்கள் தூக்கி வீசுவது பதிவாகி உள்ளது. பெண் கீழே விழுந்த பின்னர் அங்கிருந்தவர்கள் கயிறு எங்கே என அலறிய சத்தம் தெளிவாக கேட்கிறது. 

பங்கி ஜம்பிங்: பிரேசிலில் என்ன நடந்தது? 

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்கெலட்டன் பாலத்தில் பங்கி ஜம்ப் உள்ளது. இங்கு தனது காதலனுடன் மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் (21) என்ற இளம்பெண் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். பொதுவாக பங்கி ஜம்பிங் செய்பவர்களுக்கு ஊழியர்கள் உடம்பில் கயிறு கட்டுவதும் ஹெல்மட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரனங்களை மாட்டிவிடுவதும் வழக்கம். 

ஊழியர்களின் அலட்சியத்தால் பரிபோன உயிர் 

அந்த வகையில், மரியாவும் தயாராகி உள்ளார். ஹெல்மட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரனங்களை மாட்டிக்கொண்ட அவருக்கு கயிறு கட்டாமலே அங்குள்ள ஊழியர்கள் அவரை 130 அடி உயரத்தில் இருந்து கீழே தள்ளினர். இதில் நேராக கீழே விழுந்த மரியா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். 

6 பேர் கைது 

இந்த விவகாரத்தில் 6 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மரியாவின் காதலின் கண் முன்னே நடந்ததுள்ளது. அதிர்ச்சியில் கதறி அழுத அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மரியா பங்கி ஜம்பிங் செய்வதற்கு முன்பாக தனது கையில் கட்டப்பட்டிருந்த ஜம்பிங் பேண்டுகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

zeenews


 


Post a Comment

0 Comments