Ticker

6/recent/ticker-posts

மலேசியாவில் 16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகத் தடை


மலேசியா 16 வயதுக்குக் குறைவான பிள்ளைகளைச் சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டத்தை இன்று (1 ஜூன்) அறிமுகப்படுத்துகிறது.

சமூக ஊடகத்தளங்களைப் பயன்படுத்துவோரின் வயதைச் சோதிப்பது இன்றிலிருந்து கட்டாயம்.

அடையாள அட்டை போன்ற அரசாங்க ஆவணங்களைப் பயன்படுத்தி வயதை உறுதிப்படுத்தலாம்.

தற்போது சமூக ஊடகக் கணக்கு வைத்திருப்போரும் அவர்கள் 16 வயதை எட்டிவிட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

சமூக ஊடக நிறுவனங்கள் வயதை உறுதிப்படுத்தாவிட்டால் இரண்டரை மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா 16 வயதுக்குக் குறைவானவர்களைச் சமூக ஊடகத்திலிருந்து தடை செய்தது.

அடுத்து இந்தோனேசியா.

இப்போது மலேசியா.

பிரான்ஸ், பிரிட்டன், துருக்கியே, தாய்லந்து உள்ளிட்ட மேலும் பல நாடுகள் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளன.

seithi


 


Post a Comment

0 Comments