Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-20


இனியவை நாற்பது-39

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 

விளக்கம்:

பிச்சை எடுத்து வாழ்பவன் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசாமல் இருத்தல் இனிது. 
துன்பத்தில் இருக்கும் போது அதைப் பற்றி வெளியே புலம்பாமல் இருப்பது இனிது. 
பேராசையால், அறம்  பிறழாமல் வாழ  நினைக்கும் மன உறுதி இனிது.

இனியவை நாற்பது-40

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.

விளக்கம்:

பசி வந்தால் போகும் பத்து வகையான செல்வங்களைக் கொடுத்தாவது  உள்ளூரில் வாழ்வது இனிது. 
விதை நெல்லை உணவு சமைக்க பயன் படுத்தாமல் இருப்பது இனிது. 
காலா  காலத்திற்கும் நன்மை பயக்கும், நல்ல  நூல்களைப் படிப்பது இனிது. இதைப் போல் நல்ல செயல் வேறு எதுவும் இல்லை.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments