Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-29


புறங்கூறாமை

குறள் மொழி 73

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும்.

குறள் எண் :185

குறள் மொழியின் பொருள் :

திட்டமிட்டுப் புறங்கூறும் ஒருவனது குணத்தைக் கொண்டு அவன் போற்றத்தக்க உள்ளம் இல்லாதவன், சமூகத்திற்கே கேடானவன் என்பதை அறியலாம்.

நபிமொழி

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நாசகரச் செயல்பாடாகும். இந்த வதந்திகள் குறித்து திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கின்றது.இறை நம்பிக்கை கொண்டோரே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியைப் புறங்கூறி உங்களிடம் கொண்டுவந்தால், அதன் உண்மை நிலையை நன்கு அறிந்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அதனால் வருந்தும் நிலை ஏற்படும்.

இறைவசனம், திருக் குர்ஆன் 49:6.

வினை செயல் வகை

குறள் மொழி 74

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

குறள் எண் :673

குறள் மொழியின் பொருள் :

தன்னால் முடிந்த இடத்திலெல்லாம் சிறப்பாக நற்செயல்கள் செய்ய வேண்டும். இயலாத இடத்திலும் வேறுவழிகளை ஆராய்ந்து அவ்வழியில் நன்மை புரிந்திடும் வகையில் செயல்பட வேண்டும்.

நபிமொழி :

வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நன்மைகள் செய்ய வாய்ப்புகள் வரும்போது அதைத் தட்டிக் கழிக்காமல் நற்செயல்களைச் செய்திடல் வேண்டும். அதன் மூலம் அவற்றைச் செயல்படுத்தும் நம்பிக்கையாளராக நாம் இருக்க வேண்டும்.
நபிகள் பெருமானார் (ஸல்)

ஆதாரம் : நூல் - அபூதாவூத்

(தொடரும்)

 


Post a Comment

0 Comments