
மருந்து
குறள் மொழி 75
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
குறள் எண் :947
குறள் மொழியின் பொருள் :
பசிக்கு அதிகமாகவும், உடல் நலத்திற்கு ஏற்ற உணவை ஆராயாமல் அதிகமாக உண்டால், அதனால் நோயும் அளவில்லாமல் உண்டாகி கேடு விளையும்.
குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்.
நபிமொழி :
நீங்கள் உங்கள் வயிற்றை மூன்று பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று உணவுக்காக, ஒன்று நீருக்காக, ஒன்று சுவாசிக்க வெற்றிடமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆதாரம் : நூல் - திர்மிதி 2380
தீவினையச்சம்
குறள் மொழி 76
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.
குறள் எண் :204
குறள் மொழியின் பொருள் :
பிறருக்குத் துன்பம் தரும் தீயசெயல்களை மறந்தும் எண்ணாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே கேடு நினைப்பார். அது அழிவைத் தரும்.
நபிமொழி
சிறுதுளி பெருவெள்ளமாவது அற்பமானதாகத் தோன்றும் தீமைகளைப் பற்றி எச்சரிக்கையாக, அதைப் பிறருக்குச் செய்யாது இருங்கள். மேலும் அவை ஒரு மனிதனை அழிக்கும் வரை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
–நபிகள் நாயகம் (ஸல்), ஆதாரம்: அஹ்மத்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments