Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-31


புகழ்

குறள் மொழி 77

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

குறள் எண் :231

குறள் மொழியின் பொருள் :

ஏழைகளுக்கும். இல்லாதவர்களுக்கும் தானதர்மம் கொடுத்து அதனால் ஏற்படும் புகழுடன் வாழ்தல் வேண்டும். அந்தப் புகழ் பெருமையைவிட மனித உயிருக்குப் பயனுள்ளது வேறு ஒன்றும் இல்லை.

நபிமொழி:

பிறருக்குக் கொடுக்கும் தானதர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடும். துர்மரணத்தைத் தடுக்கும் என்று நபிபெருமானார் கூறினார்.
நபி மொழி, ஆதாரம் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் :திர்மிதி 600

பொறையுடைமை

குறள் மொழி 78

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.

குறள் எண் :154

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் தன்னுடைய நற்குணங்கள் தன்னைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டும் என எண்ணினால் பொறுமையை எப்போதும் விடாது கடைப்பிடிக்க வேண்டும்.

நபிமொழி :

மிகுந்த பொறுமை வேண்டும்.!! நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள். நற்பண்பை விடாதீர்கள். நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள்.

இறைவசனம்: திருக் குர்ஆன் 3:200.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments