Ticker

6/recent/ticker-posts

உடல் எடை குறைப்பில்.. தப்பித் தவறியும் 5 தவறை பண்ணாதீங்க.. என்ன தெரியுமா?


உடல் எடை குறைப்பில் சில தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக் கூடும். நீங்கள் செய்யும் தவறுகள் மூலம் உடலில் உள்ள தசைகள் குறைந்து, பலவீனமாக இருப்பீர்கள். உடல் எடை குறைப்பு பயணத்தில் என்னென்ன தவறுகள் செய்யக் கூடாது என்பது குறித்து மருத்துவர் பால் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

இன்றைய காலத்தில் உடல் பருவமனால் பலரும் அவதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்கவும், கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமாக வாழவும், உடல் தோற்றத்தை மேம்படுத்தவும் பலர் பல்வேறு டயட் முறைகளையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகின்றனர். ஆனால், உடல் எடையை குறைக்கும் முறையில் லி பொதுவாக தவறுகள் செய்யப்படுகிறது. 

உடல் எடை குறைப்பில் செய்யக் கூடாத தவறுகள்

இதனால், எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகிறது. அந்த வகையில், உடல் எடையை செய்யக் கூடாத சில தவறுகள் குறித்து மருத்துவர் பால் மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர் பால் தனது உடல் எடை குறைப்பில் தான் செய்த சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த தவறுகள் நீங்களும் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

மருத்துவர் பால் மாணிக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உடல் எடையை குறைப்பில் தான் அதிகமாக ப்ரோட்டீன் உணவுகளை சாப்பிடவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார். அதிகமான ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளாததால் தன்னுடைய கொழுப்பு குறையவில்லை என்றும் வெறும் தசைகள் மட்டுமே குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ப்ரோட்டீன், வலிமை பயிற்சி முக்கியம்

தசைகளை மீண்டும் கொண்டு வருவது மிகவும் கடினமானது.  இது தானன் சார்கோபீனியா (Sarcopenia) என்பாவர்கள் என தெரிவித்தார். சார்கோபீனியா என்பது வயது அதிகரிக்கும்போது தசை அளவு மற்றும் தசை வலிமை குறைவதை குறிக்கிறது. உடற்பயிற்சி செய்யாதது, போதுமான புரதச்சத்து இல்லாத உணவு, நீண்டகால உடல் செயல்பாட்டின்மை போன்ற காரணங்களாலும் இது வேகமாக ஏற்படலாம்.

அதனால், உடல் எடை குறைக்கும்போது வெறும் கொழுப்பை மட்டுமில்லாமல் தசைகளையும் இழக்காமல் இருக்க புரதச்சத்து நிறைந்த உணவு மற்றும் வலிமை பயிற்சிகள் மிகவும் முக்கியம் என்று பால் கூறினார். மேலும், 30 முதல் 40 வயதுகளில் 3 முதல் 5 சதவீத தசைகளையும், 50 வயதுகளில் 5 முதல் 10 சதவீத தசைகளை இழப்பீர்கள் என மருத்துவர் பால் மாணிக்கம் கூறினார். 

மேலும் படிக்க: கழிவறையில் சராசரியாக எவ்வளவு நிமிடம் அமரலாம்? இதுக்கு மேல போனா டேஞ்சர்..

தசைகள் இழக்கும்போது, சீக்கிரமாகவே வயதானவர்களாக  காட்சி அளிப்பீர்கள். பலவீனமாக உணருவீர்கள். உடலின் நிலைமையும் மோசமாகும்  எனவும் அவர் தெரிவித்தார். எனவே, உடல் எடை குறைப்பு பயணித்தில் வலிமை பயிற்சி, தினமும் 1 முதல் 2 கிராம் அல்லது கிலோ ப்ரோட்டீன் சாப்பிட வேண்டும் என்றும் தினமும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால், உடல் எடை குறைவதோடு, தசையும் வலிமைப் பெறும் என்றார்.

zeenews


 


Post a Comment

0 Comments