
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் "ஜனநாயகத்தைக் காப்போம்" என்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிநடத்துகிறார்.
மத்திய டில்லியிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரம் பேரணி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைக்கேற்ப போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் மாற்றுப் பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மாற்றங்கள், ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக எதிர்த்தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்குவது அதன் நோக்கம்.
தகுதியுள்ள அனைவரின் பெயர்களும் இடம்பெறுவதை உறுதி செய்வதே இலக்கு என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments