
கல்வி, மருத்துவம், சாஃப்ட்வேர்னு எல்லா துறையிலும் கலக்கிட்டு இருந்த AI, இப்போ சட்டத்துறையிலும் ஒரு புது சரித்திரம் படைச்சிருக்கு. உலகத்துல முதல் முறையா, ஒரு AI லீகல் சாட்பாட் கோர்ட்ல ஒரு வழக்கை ஜெயிச்சுக் காட்டியிருக்கு.
கார்ஃபீல்டு AI எப்படி வழக்கை ஜெயிக்க வைத்தது?
இந்த வழக்கில், கார்ஃபீல்டு AI தான் முழு சட்டரீதியான வேலைகளையும் செய்தது. வழக்கு சம்பந்தமான தகவல்களை அலசுவது, சட்ட நுணுக்கங்களை ஆராய்வது, தேவையான டாக்குமென்ட்களை தயார் செய்வது என எல்லா வேலைகளையும் இந்த AI தான் பார்த்தது. கோர்ட்டில் வாதங்களை முன்வைக்க மட்டும் ஒரு ஜூனியர் வழக்கறிஞரை நியமித்தார்கள். அதாவது, கேஸின் மொத்த தயாரிப்பு வேலையையும் AI செய்ய, மனித வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடினார்.
குறைந்த செலவில் சட்ட உதவி
இந்த கேஸின் இன்னொரு ஸ்பெஷல், அதன் செலவு. பொதுவாக, பிரிட்டனில் இது போன்ற சட்ட வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் பெரிய தொகையை ஃபீஸாக வாங்குவார்கள். ஆனால், கார்ஃபீல்டு AI சுமார் 50,000 ரூபாய் செலவில் இந்த சேவையை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் சட்ட உதவி எளிதாகக் கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கோர்ட் விசாரணையில் என்ன நடந்தது?
இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் பிரிட்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் கவுன்டி நீதிமன்றத்தில் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நீடித்தது. இறுதியில், நீதிமன்றம் கார்ஃபீல்டு AI-யின் கட்சிக்காரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. வழக்கு முடிந்த பிறகு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கூட, AI தயாரித்த ஆவணங்கள் தரமாக இருந்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது சட்டத்துறையில் AI-யின் திறமை குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது.
AI-க்கு சில வரம்புகளும் உள்ளன
இந்த வெற்றியைப் பெற்றாலும், AI முழுமையாக வழக்கறிஞர்களின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கார்ஃபீல்டு AI தற்போது 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள சிறிய வழக்குகளை மட்டுமே கையாள்கிறது. மேலும், AI-க்கு கோர்ட்டில் நேரடியாக வாதாடும் அனுமதி இல்லை. அதனால்தான், இந்த வழக்கில் மனித வழக்கறிஞரைப் பயன்படுத்தினார்கள். அதாவது, சட்ட ஆராய்ச்சி, ஆவணங்கள் தயாரிப்பு, வழக்கை தயார் செய்தல் போன்ற வேலைகளில் மட்டுமே AI தற்போது முக்கியப் பங்கு வகிக்கிறது.
சட்டத்துறையில் AI-க்கு இது ஒரு புதிய அத்தியாயமா?
உலகம் முழுவதும் நீதிமன்ற அமைப்பில் AI-யைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சட்ட ஆராய்ச்சி, ஆவணப் பகுப்பாய்வு மற்றும் வழக்கு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு வழக்கில் வெற்றி பெறுவதற்காக, சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதில் AI முக்கியப் பங்கு வகித்து, அந்த வழக்கு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், எதிர்காலத்தில் சட்ட சேவைகள் வேகமாகவும், குறைந்த செலவிலும் மக்களுக்குக் கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனாலும், AI ஒரு உதவும் சாதனம் மட்டுமே; இறுதி சட்ட முடிவுகள், நீதிமன்ற வாதங்கள் மற்றும் சட்டப் பொறுப்புகள் இப்போதும் மனித வழக்கறிஞர்களின் கையில்தான் உள்ளன.
asianetnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments