Ticker

6/recent/ticker-posts

“இரு அதிபர்களும் நேரில் சந்தித்து பேசினால் நல்லது” - போர் நிறுத்த விஷயத்தில் டிரம்ப்!


உக்ரைன் - ரஷ்ய அதிபர்கள் சந்தித்துப் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிபர் புதினுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு முன்மொழிந்ததோடு, பேச்சுவார்த்தைகள் முடியும் வரை முழுமையான போர் நிறுத்தத்திற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எந்த நேரத்திலும் மாஸ்கோவிற்கு வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக போர் நிறுத்தம் தேவையில்லை என்று தெரிவித்தார்.

உக்ரைன் - ரஷ்ய அதிபர்கள் சந்தித்துப் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனும், ரஷ்யாவும் சில சமரசங்களை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

news18


 


Post a Comment

0 Comments