Ticker

6/recent/ticker-posts

“திருவள்ளூர் அமோனியா வாயு விபத்தில் இரண்டு பேர் பலி” – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்


திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணிகைபேர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார். மேலும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விசாரிக்க குழு அமைத்தும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை மருத்துவ நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்ததாவது; “தனியார் இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா விஷ வாயு கசிவால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர், வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்துவருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். மருத்துவமனை டீன்கள் நிலையை தொடர்ந்து அப்டேட் செய்துவருகின்றனர். அது உடனடியாக முதலமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சில கவலைக்கிடமாக இருந்துவருகின்றனர். அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சில கவலைக்கிடமாக இருந்துவருகின்றனர். அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

news18


 


Post a Comment

0 Comments