Ticker

6/recent/ticker-posts

ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை


சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்லு கால்வாய் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் முதல் ஆறு-கடல் நேரடி இணைப்பு கால்வாயான இத்திட்டம் தற்போது நீர்ச் சோதனைக் கட்டத்தில் நுழைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது.

134.2 கிலோமீட்டர் நீளமுடைய இந்தப் பிரமாண்ட கால்வாய், சீனாவின் உள்நாட்டு வர்த்தகப் பகுதிகளை நேரடியாகக் கடல் வழியுடன் இணைப்பதோடு, ஆசியான் நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தக் கால்வாய் செயல்பாட்டுக்கு வந்தவுடன் தென்மேற்கு சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் கப்பல் போக்குவரத்து தூரம் 560 கிலோமீற்றருக்கும் மேல் குறையும். அதேவேளை, ஆண்டுதோறும் 5.2 பில்லியன் யுவான் வரையிலான தளவாடச் செலவுகளும் சேமிக்கப்படும்.

வர்த்தகம், தளவாடம், பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய சகாப்தத்தை உருவாக்கும் இந்தத் திட்டம், சூயஸ், பனாமா கால்வாய்களுக்கு நிகரான ஆசியாவின் புதிய வர்த்தக நரம்பாக உருவெடுக்கவுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

சீனா-ஆசியான் வர்த்தகம் இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் 2.75 டிரில்லியன் யுவானை எட்டியுள்ள நிலையில், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா ஆகியவை சீனாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாகத் திகழ்கின்றன.

ஆசியான் சந்தைகளையும் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரத்தையும் மேலும் நெருக்கமாக இணைக்கும் பிங்லு கால்வாய், எதிர்கால ஆசிய வர்த்தக வரைபடத்தை மாற்றியமைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு சாதனையாகக் கருதப்படுகிறது.

nambikkai



 


Post a Comment

0 Comments