நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை தற்போதைய அட்டமஸ்தானாதிபதியான பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை அவர் தமது அட்டமஸ்தானாதிபதி பதவியின் கடமைகளிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments