
இளைஞர்கள் பலர் படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி ஊர்களில் தனியாக வீடு எடுத்து அல்லது தனி அறைகளில் தங்கி வருகிறார்கள். அதில் பெரும்பாலோனோர் தங்கள் உணவு தேவைக்கு கடைகளையே நம்பி இருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த ரெசிபி பதிவு உங்களுக்கு தான்.
பேச்சுலர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எளிதாக எப்படி சுவையான குஸ்கா செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்த குஸ்காவை செய்ய அதிக நேரம் கூட எடுக்காது, பரபரப்பான காலை வேளைக்கு ஏற்ற மிகவும் எளிதாக செய்யக்கூடிய செய்முறை தான் இது...
மசாலா அரைக்க தேவையானவை :
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நடுத்தர பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி துண்டு - 1
பூண்டு - 8 பல்
இலவங்கப்பட்டை : 1
ஏலக்காய் - 2
நட்சத்திர பூ - 1
ஜாதிபாத்ரி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
advertisement
மற்ற பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பாசுமதி அரிசியை நன்றாக அலசி பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, நட்சத்திர பூ, ஜாதிபாத்ரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி துண்டு, பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு ஓரளவிற்கு கொரகொரவென்று அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திருந்தால் சூடான பேச்சுலர் குஸ்கா சாப்பிட தயாராக இருக்கும். இந்த குஸ்காவை வெங்காய தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments