Ticker

6/recent/ticker-posts

“நாங்கள் ஒருபோதும் கெஞ்ச மாட்டோம்” - டிரம்ப்பிற்கு இத்தாலி பிரதமர் பதிலடி!


தன்னுடன் ஒரு போட்டோ எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தானும் இத்தாலியும் யாரிடமும் ஒருபோதும் கெஞ்ச மாட்டோம் என ஜார்ஜியா மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி நாட்டின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியதாகவும் அதற்கு தான் மறுத்துவிட்ட நிலையில் மெலோனி மீது தனக்கு பரிதாபம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, டிரம்ப் கூறியிருப்பது முற்றிலும் பொய் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தானும் இத்தாலியும் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த வாரம் இத்தாலி அமைச்சர்கள் அமெரிக்கா செல்ல இருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments