Ticker

6/recent/ticker-posts

ஜெர்மனியில் கொளுத்தும் வெயில்.. வாகனம் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர்.. மக்கள் அவதி..!


பிரான்ஸ் நாட்டிலும் 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நீச்சல் குளங்களில் பொதுமக்கள் கூடினர்.

ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரத்தில் வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், பல இடங்களில் வாகனம் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

வெப்பத்தால் தவித்த பொதுமக்கள் மீது Water Cannon வாகனம் மூலம் காவல்துறையினர் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். வரலாறு காணாத வகையில், ஜெர்மனியில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெர்லினில் நடந்த ஐயன்மேன் ரேசில் ஏராளமானோர் பங்கேற்றனர். வெப்பத்தை தணிப்பதற்காக அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இந்நிலையில், பல மருத்துவமனைகளில் ஏசி சேவை இல்லாததால், அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, பிரான்ஸ் நாட்டிலும் 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நீச்சல் குளங்களில் பொதுமக்கள் கூடினர்.

news18


 


Post a Comment

0 Comments