
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற குரோஷியாவுடனான குழு எல் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இப்போட்டியின் 9ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் நொனி மடுக்கேயை குரோஷியாவின் லூகா மோட்ரிச் விழுத்த வழங்கப்பட்ட பெனால்டியை ஹரி கேன் கோலாக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. முதல் தடவை கேனின் பெனால்டியை டொமினிக் லிவகோவிச் தடுத்திருந்தபோதும் அவர் தனது கோல் எல்லையிலிருந்து முன்னோக்கி வந்ததால் மீண்டும் பெனால்டி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மார்டின் படுரினா பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையை குரோஷியா சமப்படுத்தியது. எனினும் முதற்பாதி முடிவடைய 3 நிமிடங்கள் இருக்கையில் டெக்லான் றைஸின் மூலையுதையை தலையால் முட்டி கோலாக்கி இங்கிலாந்துக்கு மூண்டும் முன்னிலையை கேன் வழங்கினார்.
இந்நிலையில் முதற்பாதி முடிவடையும் தருணங்களில் இவான் பெரிசிச்சிடமிருந்து பெற்ற பந்தை பீற்றர் மூஸா கோலாக்க குரோஷியா மீண்டும் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியது. அந்தவகையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே ஜூட் பெல்லிங்ஹாம் பெற்ற கோலின் மூலம் மறுபடியும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, போட்டி முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் புகாயோ ஸாகா வழங்கிய பந்தை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கோலாக்கியதோடு இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments